×

பாதுகாப்பு அமைச்சகம் தகவல் 100 புதிய சைனிக் பள்ளிகளில் இ-கவுன்சிலிங் மூலம் சேர்க்கை

புதுடெல்லி: ‘நாடு முழுவதும் அமைக்கப்படும் 100 புதிய சைனிக் பள்ளிகளில் இ-கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’ என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்து, ராணுவத்தில் அல்லது தேசியப் பாதுகாப்புக் கல்வி மையத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவற்றை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் புதிதாக 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் அறிவித்தார்.இப்புதிய பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது இ-கவுன்சிலிங் மூலம் நடத்தப்படும் என பாதுாப்பு அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது. இது குறித்து அது  விடுத்துள்ள அறிக்கையில், ‘100 புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தானியங்கி மூலமாக இ-கவுன்சிலிங் வாயிலாக நடத்தப்படும். இதன் மூலம், மாணவர் சேர்க்கையில் முழு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். சைனிக் பள்ளி இணையதளம் மூலமாக வழங்கப்படும் லிங்க்கில் மாணவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் ரேங்க் அடிப்படையில் பள்ளிகளை தேர்வு செய்து முடிவுகளை பெறலாம்’ என கூறப்பட்டுள்ளது….

The post பாதுகாப்பு அமைச்சகம் தகவல் 100 புதிய சைனிக் பள்ளிகளில் இ-கவுன்சிலிங் மூலம் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Defense Ministry ,New Delhi ,Ministry of Defense ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...