×

20 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜெயம் திரைப்படம்

ராஜா இயக்கத்தில் ரவி, சதா மற்றும் பலரது நடிப்பில் 2003ம் ஆண்டு ஜுன் 21ம் தேதி வெளிவந்த படம் ‘ஜெயம்’. இப்படம் வெளிவந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. தெலுங்கில் 2002ம் ஆண்டில் வெளிவந்த ‘ஜெயம்’ படத்தை அதே பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். தெலுங்கில் நடித்த சதா, தமிழிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். படம் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற பிறகு படத்தின் இயக்குனர் ராஜா, ஜெயம் ராஜா என்றும், கதாநாயகன் ரவி ஜெயம் ரவி என்றும் பிரபலமானார்கள்.
ஜெயம் ரவி என்று இன்று வரை அதே பெயரே ரவிக்கு நிலைத்துவிட்டது.

ஜெயம் ராஜா மட்டும் தன்னை மோகன் ராஜா என அப்பா பெயரை சேர்த்து மாற்றிக் கொண்டார். வசதியான குடும்பத்துப் பெண்ணைக் காதலிக்கும் ஏழைப் பையன் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. அந்தக் காதலுக்கு வரும் எதிர்ப்புகளை மீறி காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சாதாரணக் கதையாக இருந்தாலும் சுவாரசியமான காட்சிகளாலும், அழுத்தமான கதாபாத்திரங்களாலும், இனிமையான பாடல்களாலும் இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து பெரும் வெற்றியைப் பெற்றது.

The post 20 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜெயம் திரைப்படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : ravi ,sada ,Jayam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!