×

திருவரங்குலம் தீர்த்த குளத்தில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு ஏராளமான பெண்கள் பங்கேற்பு

 

புதுக்கோட்டை, ஆக. 4: திருவரங்குலத்தில் தீர்த்த குளமான நைனார குளக்கரையில் ஆடிப்பெருக்கையொட்டி, மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சுமங்கலி பெண்கள், கன்னிப் பெண்கள் வழிபாடு நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குலத்தில் தீர்த்த குலமான நைனார குளக்கரையில் ஆடிப்பெருக்கையொட்டி, மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சுமங்கலி பெண்கள், கன்னிப் பெண்கள் கலந்து கொண்டு குளத்தின் படித்துறையில் மண் வீடு கட்டி மஞ்சளில் பிள்ளையார் பிடித்து தேங்காய் பூ, வாழைப்பழம், நாவல் பழம், கொய்யாப்பழம், மாம்பழம், பேரிக்காய், வெள்ளரிக்காய், மஞ்சள் நூல் வைத்து பெண்கள் கும்மி அடித்த குலவை பாடி ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கழுத்தில் கட்டிக்கொண்டு ஆண்களுக்கு கையில் மஞ்சள் கயிறு கட்டி ஆடிப்பெருக்கை அமர்க்களமாக கொண்டாடினர்.

 

The post திருவரங்குலம் தீர்த்த குளத்தில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு ஏராளமான பெண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Aadiperukku ,Thiruvarangulam Theertha pond ,Pudukottai ,Nainara pond ,Theertha pond ,Thiruvarangulam ,Thiruvarangulam, Pudukottai district ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்