×

மீன்பாசி குத்தகைக்கு ஒப்பந்தங்கள் வரவேற்பு

விருதுநகர், ஆக.4: விருதுநகர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராப் பகுதியில் தாமரைக்குளம், ராஜபாளையம் பகுதியில் மருங்கூர், குறவன்குளம் ஆகிய 3 கண்மாய்களில் மீன்பாசி குத்தகை உரிமை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்த புள்ளிகளில் வரவேற்கப்படுகின்றன.

ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், வேல்சாமி நகர், பிஆர்டி டிப்போ பின்புறம் விருதுநகர் என்ற முகவரியில் அல்லது 04562 244707 அல்லது adfisheriesvnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் இணைதளம் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post மீன்பாசி குத்தகைக்கு ஒப்பந்தங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Office of the Assistant Director of Fisheries ,Virudhunagar District ,Virudhunagar District Fish Breeders Development Agency ,Thamaraikulam ,Vathrap ,Marungur ,Kuravankulam ,Rajapalayam ,
× RELATED ஓய்வூதியர் தின விழா