மூணாறு, ஆக. 3: கேரளா மாநிலம் மூணாறில் கிரீன்ஸ் அமைப்பு சார்பில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ கால்பந்தாட்ட போட்டி இன்று ஆக.3ல் நடக்கிறது. மழை கால சுற்றுலாவை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வகையில் மூணாறில் கிரீன்ஸ் அமைப்பு சார்பில் ரெயின் 40’ என்ற பெயரில் பெனால்டி ஷூட் அவுட்’ கால்பந்தாட்ட போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான போட்டிகள் இன்று நடக்கின்றன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்க பணம், கோப்பை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மூணாறில் கால்பந்தாட்ட போட்டி appeared first on Dinakaran.
