- முதல் அமைச்சர்
- வின்ஃபாஸ்ட்
- தூத்துக்குடி
- அமைச்சர்
- Geethajeevan
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எம்.கே. ஸ்டாலின்
- மாநில சமூக நலத்துறை
- பெண்கள் உரிமைகள் அமைச்சர்
- தின மலர்
தூத்துக்குடி: தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தூத்துக்குடியில் நாளை புதிய கார் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் என மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிகழ்வு நாளை (4ம்தேதி) நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (4ம்தேதி) திங்கட்கிழமை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு, காலை 9 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று, தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து, அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்கம் மஹாலில் நடைபெறும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
பின்னர், அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்புகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் ஆலையை முதல்வர் நாளை திறக்கிறார்: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை appeared first on Dinakaran.
