×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கரடி உலா: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பீதி

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா பகுதிகளில் தொடர்ந்து கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதியில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரடிகளின் அட்டகாசம் மிகவும் அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் இந்த கரடிகள் ஆட்கள் இல்லாத வீடு மற்றும் கோயில்களை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடி செல்கின்றன. இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தினமும் மாலையில் ஒரு கரடி உலா வருகிறது. நேற்று மாலையிலும் இந்த கரடி பூங்காவின் அலுவலகம் மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்தது.

இதனைக் கண்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அச்சமடைந்தனர். இதனால் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க ஊட்டி ரோஜா பூங்கா பகுதியிலும் தற்போது கரடி ஒன்று உலா வருகிறது. இந்த கரடி அங்குள்ள குடியிருப்பு பகுதிகள், ரோஜா பூங்கா போன்ற பகுதிகளில் அடிக்கடி வலம் வருவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் கரடி உலா: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பீதி appeared first on Dinakaran.

Tags : Ooty Botanical Garden ,Ooty ,Ooty Government Botanical Garden ,Rose Garden ,Nilgiris district ,
× RELATED விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து...