
சென்னை: ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது,
இந்தியப் பிரதமர் அவர்களே!
தங்களின்
விடுதலைத் திருநாள் பேருரைக்கு
மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த
தங்கள்
என் ஜனநாயக வணக்கம்
தமிழ்நாட்டிலிருந்து
ஓர் இந்தியனாக எழுதுகிறேன்
தாங்கள்
காலமெல்லாம் போற்றிவரும்
திருக்குறள்
இனம் மொழி மதம் நாடுகடந்த
உலகத்தின் அசைக்கமுடியாத
அறநூல்
மனிதம் என்ற
ஒற்றைக் குறிக்கோளை
உயர்த்திப் பிடிப்பது
அதனை
இந்தியாவின் தேசிய நூலாக
அறிவிக்க வேண்டும் என்பது
தமிழர்களின் நீண்ட கனவு
மற்றும்
நிறைவேறாத கோரிக்கை
இந்தியாவின்
79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில்
திருக்குறள்
இந்தியாவின் தேசிய நூலாக
அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை
வெளியிட வேண்டுகிறோம்
தாங்கள்
கேட்டுக்கொண்ட வண்ணம்
நமோ செயலியிலும்
இதனைப் பதிவிடவிருக்கிறோம்
இது
உலகப் பண்பாட்டுக்கு
இந்தியா கொடுக்கும் கொடை
என்று கருதப்படும்;
ஆவனசெய்ய வேண்டுகிறோம்
ஆகஸ்ட் 15 அன்று
தொலைக்காட்சி முன்னால்
ஆவலோடு காத்திருப்போம். இவ்வாறு தெரிவித்தார்.
The post ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: வைரமுத்து கோரிக்கை appeared first on Dinakaran.
