×

பொதுபிரிவினருக்கான ஆன்லைன் கவுன்சலிங் 9,723பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேர்வு செய்தனர்: மருத்துவத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த  மாதம் 27ம் தேதி தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்  சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தய்வில் 73  மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டுக்கான  கலந்தாய்வில் 541 மாணவர்களுக்கும் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை  வழங்கப்பட்டது. இந்தநிலையில் கொரோனா தொற்று  பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு  கல்லூரிகளின் 3,995 எம்பிபிஎஸ் இடங்கள், 157 பிடிஎஸ் இடங்கள் மற்றும்  தனியார் கல்லூரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 1,390 எம்பிபிஎஸ்  இடங்கள், 1,166 பிடிஎஸ் இடங்களுக்கான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை  முதல் முறையாக ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி,  கலந்தாய்வில்  பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 10,462 பேரில் 9,951 பேர்  ஆன்லைனில் பதிவு செய்தனர். இந்தநிலையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு  கடந்த 2ம் தேதி காலை 8 மணிக்கு https://tnmedicalselection.net/ மற்றும்  https://www.ttnhealthtn.tn.gov.in/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில்  தொடங்கியது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் நேற்று வரை இடங்களை தேர்வு  செய்தனர். இதற்கிடையில் நேற்று 9,723 மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து இடங்களை தேர்வு செய்த மாணவர்கள், வரும் 8ம் தேதி  முதல் 10ம் தேதி வரை அருகில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து சரிபார்த்து கொள்ள வேண்டும். அதன்பிறகு 15ம் தேதி இடங்கள் பெற்ற மாணவர்கள் குறித்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். 16ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். வரும் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பிற்பகல் 3மணிக்குள் கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும்….

The post பொதுபிரிவினருக்கான ஆன்லைன் கவுன்சலிங் 9,723பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேர்வு செய்தனர்: மருத்துவத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chennai Omantur ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...