×

செம்பனார்கோயில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு

 

செம்பனார்கோயில், ஆக.2: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செம்பனார்கோயில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், செவிலியர்களின் விவரங்கள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post செம்பனார்கோயில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Collector Srikanth ,Sembanarkoil Primary Health Centers ,Sembanarkoil ,District Collector ,Srikanth ,Akkur Government Primary Health Center ,Sembanarkoil Government Primary Health Center ,Mayiladuthurai district ,Collector ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...