×

முதல் தேசிய விருது எம்.எஸ். பாஸ்கர் நெகிழ்ச்சி

சென்னை: 71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த துணை நடிகராக பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவர் பெறும் முதல் தேசிய விருதாகும்.  இதுபற்றி எம்.எஸ்.பாஸ்கர் கூறும்போது, ‘‘தேசிய விருது கிடைத்தது பெருமையாக உள்ளது.

இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. பார்க்கிங் பட இயக்குனர், தயாரிப்பாளர், என்னுடன் நடித்தவர்கள், பணியாற்றிய டெக்னீஷியன்கள், பத்திரிகை மற்றும் ஊடகங்கள், ஆதரவளித்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி’’ என்றார்.

The post முதல் தேசிய விருது எம்.எஸ். பாஸ்கர் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : MS Bhaskar Lainichi ,Chennai ,71st National Film Awards ,MS Bhaskar ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...