×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் வரும் 5ம் தேதி நடக்கிறது

 

புதுக்கோட்டை, ஆக. 4: “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மாவட்டத்தில் வரும் 5ம் தேதி கீழ்க்கண்ட இடங்களில் புதுக்கோட்டை மாநகராட்சி, 12 மற்றும் 30 வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு காமராஜபுரம் 10-ஆம் வீதியில் உள்ள சமுதாயக் கூடத்திலும், அரிமளம் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு கணேஷ் செட்டியார் விசாலாட்சி ஆச்சி திருமண மண்டபத்திலும், திருவரங்குளம் – 5 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு வம்பன் நால்ரோடு மனமகிழ் திருமணமண்டபத்திலும், அறந்தாங்கி – 4 ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு விக்னேஸ்வரபுரம், சந்தோஷ் மஹாலிலும், விராலிமலை – 6 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு டி.மேட்டுப்பட்டி, சேவை மையக்கட்டிடத்திலும், அன்னவாசல் – 3 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு புல்வயல் மங்களா மஹாலிலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.

 

Tags : Ungali Stalin ,Pudukkottai district ,Pudukkottai ,Pudukkottai Corporation ,Ward 12 ,Hall ,Kamarajapuram 10th Street ,Harimalam Town Panchayat ,
× RELATED ஓய்வூதியர் தின விழா