×

கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

சிவகாசி, ஆக. 3: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் மூத்த குடிமகன் சின்னையன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலருமான மீனாட்சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சமூக தணிக்கையின் நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சமூக தணிக்கையை வட்டார வள அலுவலர் ரமேஷ் தலைமையிலான அமுதா, மாரியம்மாள், கனகாபரணி. குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர். பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டார்.

திட்டப் பயனாளிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்ட நிகழ்வுகள் அனைத்தும் பஞ்சாயத்து நிர்ணே செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பயனாளிகளின் கோரிக்கை பெறப்பட்டு புதிய வேலை அட்டை வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் கனகமுத்து நன்றி கூறினார்.

Tags : Social Audit Special Gram Sabha Meeting ,Krishnapuram Panchayat ,Sivakasi ,Sivakasi Panchayat Union ,Chinnaiyan ,Meenakshi ,Development ,Ramesh ,Amutha ,Mariammal ,Kanakaparani ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...