×

பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக பேராசிரியர் தேர்வு

 

கரூர், ஆக. 3: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக கரூர் அரசு கல்லூரி இணைப்பேராசிரியர் ப.பார்த்திபன் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். கரூர் அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை 01.08.2025 நடைபெற்ற ஆசிரியர் பிரநிதிக்களுக்கான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினருக்கான தேர்தல் மூலம் பார்த்திபன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது பார்த்திபன் கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் இணைப் பேராசிரியராகவும், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கரூர் கிளையின் செயலராகவும் பணியாறுவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Bharathidasan University Council ,Karur ,Karur Government College ,P. Parthiban ,Trichy Bharathidasan University Council ,Parthiban ,Trichy Bharathidasan University Council for Teacher Representatives ,Karur Government Arts College ,Tamil Nadu Government College Teachers' Association ,
× RELATED அதிகாரிகள் அதிரடி நில மேலாண்மை சுண்ணாம்புச்சத்து அதிகரிக்க ஆலோசனை