×

பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

அரூர், ஆக.1: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே சாமாண்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சாரதா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர். அவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. ஆசிரியர்கள் கோவிந்தராஜ், சிவராஜ், உஷா ராணி, சரண்யா, பூமதி மற்றும் பொதுமக்கள், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாணவர்கள் தங்களது வீடுகளில் வேம்பு, புங்கன், காட்டு நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நட்டனர்.

The post பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Arur ,Samandahalli Panchayat Union Middle School ,Morappur ,Dharmapuri district ,Headmaster ,Saratha ,Sapling planting ceremony ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா