- போஸோ
- திருச்சி
- ஜெயபுரம் அனைத்து மகளிர் காவல் துறை
- ராமலிங்கம்
- நோச்சியம் கிராமம்
- Mannachanallur
- திருச்சி மாவட்டம்
- எஸ்.பி. செல்வநாகரத்தினம்
- திருச்சி மாவட்ட ஆட்சியர்
- திருச்சி மத்திய சிறை
திருச்சி, ஆக. 2: சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மண்ணச்சநல்லூர் நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (60) என்பவர் மீது ஜூலை.10ம் தேதி திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வரும் ராமலிங்கம் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில், திருச்சி மாவட்ட கலெக்டர் தடுப்பு காவல் ஆணை பிறப்பித்தார்.நேற்று திருச்சி மத்திய சிறையிலுள்ள தடுப்பு காவல் ஆணை சார்வு செய்யப்பட்டு ராமலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போது வரை மொத்தம் 69 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
