×

மாநகரில் ஆண் சடலம் மீட்பு

 

மதுரை, ஜூலை 31: மதுரை மேற்கு கிராம நிர்வாக அலுவலர் சுருளி ஆண்டவர். இவருக்கு நேற்றுகாலை செல்போன் வாயிலாக வந்த தகவலின் பேரில் பால்மால் தெரு மகால் 1வது தெரு சந்திப்பு பகுதிக்கு சென்றார். அங்கு சுமார் 55 வயதுடைய ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதையடுத்து மர்ம நபர் இறந்து கிடப்பது குறித்து விஏஓ சுருளி ஆண்டவர் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியும் இறந்து கிடந்த நபர் குறித்து உடனடியாக அடையாளம் காண முடியாமல் போனது. இதையடுத்து உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இறந்த நபர் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post மாநகரில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,West Village ,Administrative Officer ,Suruli Andavar ,1st Street ,Balmal Street ,Mahal ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்