×

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

சிதம்பரம், ஆக. 1: சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடி பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் மகன் தமிழ் இனியன்(29), பொறியியல் படித்து முடித்துள்ளார். இவரும் 23 வயது பெண்ணும் கடந்த 2023லிருந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் இனியன் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள அப்பெண் வற்புறுத்தி உள்ளார். அதற்கு தொடர்ந்து தமிழ் இனியன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இது குறித்து சிதம்பரம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தமிழ் இனியனை கைது செய்தனர்.

Tags : Chidambaram ,Tamil Inian ,Balachandran ,Keelamoongiladi ,Inian ,Chidambaram Women’s Police Station ,
× RELATED மயிலம் அருகே மரத்தின் மீது தனியார் பஸ் மோதி விபத்து: 7 பேர் காயம்