- ஓய்வூதியதாரர்கள் சங்கம் மாநாடு
- Kuzhithurai
- மார்த்தாண்டம்
- விளவங்கோடு
- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம்
- மலையாள சமாஜ கூட்டரங்
- மாவட்டத் தலைவர்
- நாராயண பிள்ளை
- செல்வமணி
- சுகுமாரன்
- ராமகிருஷ்ணன் நாயர்
- செல்லசாமி
- ஜெயசிங்
- இன்னாசிமுத்து
- ஜெயக்குமாரி
- கனகராஜ்
மார்த்தாண்டம், ஆக. 1: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் விளவங்கோடு வட்டக்கிளை 5வது மாநாடு குழித்துறையில் உள்ள மலையாள சமாஜ கூட்டரங்கில் நடந்தது. மாநாட்டிற்கு வட்ட தலைவர் நாராயண பிள்ளை தலைமை வகித்தார். செல்வமணி வரவேற்றார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி வட்ட தலைவராக சுகுமாரன், துணைத்தலைவர்களாக நாராயண பிள்ளை, ராமகிருஷ்ணன் நாயர், செல்லசாமி, செயலாளராக ஜெயசிங், இணைச்செயலாளர்களாக செல்வமணி, இன்னாசிமுத்து, ஜெயகுமாரி, பொருளாளராக கனகராஜ் மற்றும் 16 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாவட்ட இணைச்செயலாளர் சசிதரன், மாவட்ட துணைத்தலைவர் ஐசக் சாம்ராஜ், மாநில துணைத்தலைவர் சுகுமாரன் ஆகியோர் பேசினர். வேலை அறிக்கை, நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் பிரசன்னகுமாரி நன்றி கூறினார்.
