×

9 நாட்களுக்கு பிறகு திருக்குறுங்குடி கோயிலுக்கு அனுமதி : பக்தர்கள் குவிந்தனர்

களக்காடு:  திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் 9 நாட்களுக்கு பிறகு தரிசனம் செய்வதற்கு தடை நீக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.  களக்காடு அருகே திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள திருமலைநம்பி கோயில் ஆழ்வார்களால் பாடப்பட்ட தலமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் தமிழ் மாத கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தருவது வழக்கம். கடந்த ஜன.27ம் தேதி முதல் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதனால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு கடந்த 27ம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ரமேஷ்வரன் உத்தரவுப்படி 9 நாட்களுக்கு பின் நேற்று (5ம் தேதி) முதல் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று திரளான பக்தர்கள் குவிந்தனர். காலையில் திருமலை நம்பி பெருமாளுக்கு சிறப்பு  திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் நாங்குனேரி, களக்காடு, பாளையங்கோட்டை, குலவணிகர்புரம், தென்கலம்புதூர், திசையன்விளை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பக்தர்கள் நம்பியாற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாததால் இரவில் கோயிலில் தங்குவதற்கோ, பூஜை பொருட்கள் கொண்டு செல்லவோ, பொங்கல் வைக்கவோ, நேர்த்தி கடன்கள் செலுத்துவதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை.  ஆனால் பக்தர்களின் வேண்டுகோளின் படி கோயிலில் மொட்டை போடுவதற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்….

The post 9 நாட்களுக்கு பிறகு திருக்குறுங்குடி கோயிலுக்கு அனுமதி : பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Thirukkurungudi ,temple ,Kalakadu ,Tirumalainambi temple ,Tirukurungudi ,Kalakkadu… ,
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்