ஊட்டி : சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக ரோஜா பூங்கா நர்சரியில் ரோஜா செடி தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவிற்கு செல்கின்றனர். இவர்கள், இங்குள்ள மலர்களை கண்டு ரசிப்பதுடன், தங்களது வீட்டுத் தோட்டங்களில் பூச்சடிகளை வளர்க்க அந்த மலர் செடிகளின் விதைகள், கிழங்குகள் ஆகியவைகளை வாங்கிச் செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் ரோஜா பூங்காவில் மலர்களை கண்டு ரசிப்பதுடன் அவைகளின் கட்டிங்குகளை (ரோஜா மொட்டு செடி) வாங்கிச் செல்கின்றனர்.இதற்காக, தோட்டக்கலைத்துறை ஆண்டுதோறும் பல ஆயிரம் ரோஜா செடிகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது ஊட்டி வரும் பலர் ரோஜா நர்சரியில் வளர்க்கப்பட்ட ரோஜா செடிகளை வாங்கிச் சென்ற நிலையில், தற்போது பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக 50 ஆயிரம் ரோஜா செடிகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்….
The post ரோஜா செடிகள் விற்பனைக்கு தயார் appeared first on Dinakaran.