×

மூணாறு அருகே மறையூரில் சந்தனமரம் வெட்டி கடத்தல் : வனத்துறை விசாரணை

மூணாறு :  மூணாறு அருகே, மறையூரில் சந்தனமரத்தை வெட்டி கடத்துவது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறிலிருந்து 40 கி.மீ தொலைவில் மறையூர் உள்ளது. இப்பகுதியில் சந்தன மரங்கள் இயற்கையாக வளர்கின்றன. இந்நிலையில், இந்த பஞ்சாயத்தில் உள்ள ஆற்றுப்புறம்போக்கிலும், தனியார் இடங்களிலும் வளர்ந்துள்ள சந்தனமரங்களை சில தினங்களுக்கு முன் மர்மநபர்கள் வெட்டி கடத்துவதாக புகார் எழுந்துள்ளது. நாகர்பள்ளம் ஆற்றுப்பகுதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சில மாதங்களாக தனியார் நிலங்களில் இருக்கும் சந்தன மரங்கள் வெட்டி கடத்துகின்றனர். இது தொடர்பாக கடந்த 3 மாதங்களில் 7 கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவது தொடர்கிறது….

The post மூணாறு அருகே மறையூரில் சந்தனமரம் வெட்டி கடத்தல் : வனத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Karayur ,Munnar ,Kaiyur ,Kerala ,Idukki ,Dinakaran ,
× RELATED நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது