×

மீன் பிடிக்க சென்ற வாலிபர் சாவு

ரெட்டியார்சத்திரம், ஜூலை 31:கன்னிவாடி அருகே வெள்ளம்பட்டி சங்கம் குளத்தில் வாலிபர் ஒருவர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்ஐ கோட்டைராஜன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் கசவனம்பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி (35) என்பதும், மீன் பிடிக்க சென்ற போது குளத்தில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. திருமணமான இவர் கடந்த 4 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Rediyarshatram ,Vellampatti Sangam pond ,Kannivadi ,SI Kottairajan ,Dindigul Government Medical College Hospital ,Karutapandi ,Kasavanampatti ,
× RELATED ஓய்வூதியர் தின விழா