×

திருச்சி அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

 

திருச்சி, ஜூலை 31: திருச்சி தென்னூர் அருகே அரசு பேருந்து மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி தென்னூர் பாரதி நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (65) இவர் ஜூலை 29ம் தேதி மேலப்புலிவார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று சாலையை கடக்க முயன்ற போது ஸ்ரீரங்கத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த அரசு பேருந்து பழனியம்மாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பழனியம்மாள் படுகாயம் அடைந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Trichy ,Thennur, Trichy ,Palaniammal ,Bharathi Nagar ,Melapullivar road ,Srirangam ,Central Bus Stand ,
× RELATED ரூ.1.17 கோடி கஞ்சா திரவம் பறிமுதல்