×

ரத்ததான முகாம்

அரூர், ஜூலை 30: அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். கல்லூரியின் போதை ஒழிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் குமார் சிறப்புரையாற்றினார். அரூர் ரோட்டரி சங்க தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முகாமில் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோபிநாத் செய்திருந்தார்.

The post ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,National Welfare Program of Aroor Government Arts and Science College ,Principal ,Mangaiyarkarasi ,Kumar ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா