×

புற்று நாகர்கோயிலில் பெண்கள் வழிபாடு

தர்மபுரி, ஜூலை 30: நாக பஞ்சமியையொட்டி, தர்மபுரி செந்தில் நகரில் உள்ள புற்று நாகர்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாக பஞ்சமியையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புற்று கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தர்மபுரி செந்தில் நகரில் உள்ள கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், பாம்பு புற்றுக்கு பால், முட்டை வைத்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர். வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post புற்று நாகர்கோயிலில் பெண்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Putru Nagar Temple ,Dharmapuri ,Naga Panchami ,Dharmapuri Senthil Nagar ,Putru ,Dharmapuri district ,Dharmapuri Senthil Nagar… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா