×

திருநள்ளாறு கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கூட்டம் அலைமோதும். கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.   தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் இரவு நேர, முழுநேர ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று  திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா என கோயில் ஊழியர்கள் சரிபார்த்து அனுமதித்தனர். மேலும் முககவசம், சமூக இடைவெளியை பக்தர்கள் கடைபிடிக்க அறுவுறுத்தினர். ஆனால் கோயில் வாசலில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த பெரிதும் சிரமப்பட்டனர்.  மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் சென்னை, புதுச்சேரி, திருச்சி, கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு போதுமான பேருந்து வசதி இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்….

The post திருநள்ளாறு கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thirunalaru ,Karaikal ,Chaneswara Bhagavan Temple ,Thirunalalar ,Transnational Temple ,
× RELATED காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி...