×

வாலாஜா கன்னாரத்தெருவில் புதுப்பிக்கப்பட்ட காளிகாம்பாள் கோயில் மகாகும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

வாலாஜா: வாலாஜா கன்னாரத்ெதருவில் காளிகாம்பாள் கோயில் உள்ளது. விஸ்வகர்மா சமுதாயத்தினரால் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதற்கான மகாகும்பாபிஷேகம்  இன்று காலை நடந்தது. சர்வசாதகம் பிரம்மஸ்ரீ ஜோதிமுருகாச்சாரியார் மற்றும் பிரம்மஸ்ரீ பிரகாஷ்சர்மா ஆகியோர் தலைமையிலான வேத விற்பன்னர்கள் யாகங்கள், பூஜைகள் செய்தனர். இன்று காலை கலச புறப்பாடு, 9 மணிக்கு ஸ்ரீநந்தல் மடாலய மடாதிபதி சிவராஜஞானாச்சார்ய குரு சுவாமிகள் முன்னிலையில் 5 நிலை ராஜகோபுரம், மூலவர் காளிகாம்பாள் மற்றும் அனைத்து மூலாலய தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் திருப்பணி கமிட்டி தலைவர்  சந்திரன், காளிகாம்பாள் கோயில் விஸ்வகர்மா அறக்கட்டளை தலைவர் பாலகுமார், செயலாளர் உதயன், பொருளாளர் பாலாஜி, விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தலைவர் ஜனார்த்தனன், திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் ரமேஷ்  மனோகரன், கணேஷ், பாஸ்கர்,  திருவிழா கமிட்டி உறுப்பினர்கள் சங்கர், கண்ணன், செந்தில்வேலன், பிரகாஷ், வெங்கடேசன், பெருமாள், லோகேஷ்வரன், காந்தி, எம்.செந்தில்குமார், எம்.ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட காளிகாம்பாள் வீதி உலா நடைபெறும்.   நாளை மாலை கலைமாமணி ஷன்மதி தலைமையில் நடராஜபெருமான் நாட்டியப்பள்ளி  குழுவினரின் நாட்டியாஞ்சலி நடைபெறும்….

The post வாலாஜா கன்னாரத்தெருவில் புதுப்பிக்கப்பட்ட காளிகாம்பாள் கோயில் மகாகும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kalikamba Temple Mahakumbabhishekam ,Valaja Kannarateru ,Valaja ,Walaja Kannarathtedar ,Kalikamba Temple ,Viswakarma ,Ikhoil ,
× RELATED சென்னைக்கு கார்களில் கடத்திய 3 டன் குட்கா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது