×

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

 

தஞ்சாவூர், ஜூலை 30: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தீப்பந்தம் ஏந்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கோட்டத் தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் திரவியராஜ் ஐயப்பன் மாயகிருஷ்ணன் கோட்டை இணைச்செயலாளர்கள் முருகானந்தம் கலியமூர்த்தி முத்துசாமி மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் தலைவர் செந்தில்குமார் துவக்க உரையாற்றினார். கோட்ட பொறியாளர் கருணாநிதி துவக்க உரை ஆற்றினார். இறுதியில் வட்ட பொருளாளர் பாலு நன்றியுரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களில் உயிர் நீத்த அவர்களின் குடும்பத்தில் கருணை நியமனம் வழங்க கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும்.மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசு பராமரித்திட வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதில் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Tags : Thanjavur ,Tamil Nadu Highways Department Road Workers Association ,Divisional Engineer's Office ,Thanjavur, Panagal Building ,Divisional President ,Janardhanan ,Vice Presidents ,Thiraviyaraj Ayyappan Mayakrishnan Kotte ,Murugananandham Kaliyamoorthy Muthusamy ,State Executive Committee ,Karuppiah ,Senthilkumar ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்