×

உடையார்பாளையம் பேரூராட்சியில் 1.08 கோடியில் அரசு வளர்ச்சி திட்டப்பணிகள்

 

ஜெயங்கொண்டம், ஜூலை 30: உடையார்பாளையம் பேரூராட்சியில் ரூ.1.08 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையம், பேரூராட்சி ராஜவீதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ்,ரூ 18 லட்சத்தில், புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுதல்,கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உடையார்பாளையம்,

செங்காளி அம்மன் கோயில் தெருவில், ரூ.37 லட்சத்தில், பேவர் பிளாக் சாலை அமைத்தல், உடையார்பாளையம், வார்டு எண் 11 திருச்சி ரோடு சோழங்குறிச்சி செல்லும் சாலை குறுக்கு தெருவில், ரூ.26.50 லட்சத்தில், பேவர் பிளாக் சாலை அமைத்தல், உடையார்பாளையம்,வார்டு எண் 15 தெற்கு தெரு, ஆதிதிராவிடர் குறுக்கு தெருவில்,ரூ 19 லட்சத்தில், பேவர் பிளாக் சாலை அமைத்தல்,உடையார்பாளையம் வார்டு எண் – 13 ஜெயங்கொண்டம் ரோடு குறுக்குத் தெருவில்,ரூ 7 லட்சத்தில், பேவர் பிளாக் சாலை அமைத்தல் ஆகியவற்றை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், துணைத் தலைவர் அக்பர் அலி, ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் தன.சேகர், உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஷாஜஹான் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், உடையார்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள், திமுக தோழர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Udayarpalayam Town Panchayat ,Jayankondam ,MLA ,K.S.K.K.Kannan ,Jayankondam Assembly Constituency ,Udayarpalayam ,Town Panchayat Rajaveethi ,Anganwadi Center ,Chengali Amman Temple Street ,Ward No. 11 ,
× RELATED ஓய்வூதியர் தின விழா