×

ஆடிப்பூர திருவிழாவில் வளையல்களை வழங்கிய பெண்கள்

மானாமதுரை, ஜூலை 30: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு வளையல்களை நேர்த்திக்கடனாக செலுத்தி பெண்கள் வழிபட்டனர். மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் ஆடிப்பூரம் என்பதால் மூலவர், உற்சவர் ஆனந்தவல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வளையல்கள், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோயிலுக்கு வந்த பெண்கள் பக்தர்கள் வளையல்கள், மஞ்சள்கயிறு, குங்குமம், மல்லிகை, முல்ைல பூக்களை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட வளையல்கள், குங்குமம் பிரசாதமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

Tags : Aadipuram festival ,Manamadurai ,Anandavalli Amman Temple ,Aadithapasu festival ,Anandavalli Somanathar Temple ,Aadipuram ,Anandavalli Amman ,
× RELATED காத்திருப்பு போராட்டம்