×

வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கு கேரள சபாநாயகரிடம் விசாரிக்க சுங்க இலாகா அதிரடி முடிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்  உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில், ைகது  செய்யப்பட்ட முக்கிய நபர்களான ெசாப்னா மற்றும் சரித்குமாரிடம் சுங்க இலாகா  விசாரணை நடத்தியது. அப்போது, வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய இவர்கள்,  இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு அமெரிக்க டாலர்கள் கடத்தியதும்  தெரியவந்தது.துபாய் உட்பட வளைகுடா நாடுகளில் தொழில் நடத்திவரும்,  ேகரளாவில் உள்ள சில முக்கிய நபர்களுக்காக டாலர்களை கடத்தியதாக இவர்கள்  கூறினர். இவர்களில் ஒரு முக்கிய பிரமுகர் கேரள சபாநாயகர்  ஸ்ரீராமகிருஷ்ணன் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரிடம் சுங்க இலாகா விசாரிக்க  தீர்மானித்துள்ளது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. இன்னும் ஒருசில தினங்களில்  இதுதொடர்பாக அவருக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிகிறது. …

The post வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கு கேரள சபாநாயகரிடம் விசாரிக்க சுங்க இலாகா அதிரடி முடிவு appeared first on Dinakaran.

Tags : Customs Illaga Action ,Thiruvananthapuram ,United Arab Emirates ,Thiruvananthapuram, Kerala State ,Customs Laga Action ,Speaker ,Dinakaran ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா