×

திருலோகி சுந்தரேஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவிடைமருதூர், ஜூலை 25: திருலோகி சுந்தரேஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. கும்பகோணம் அருகே திருலோகி சுந்தரேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 27 சென்ட் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்ற மனுவிற்கு ஆக்கிரமிப்பு வெளியேற்ற உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் படி நேற்று முன்தினம் திருலோகியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு மயிலாடுதுறை துணை ஆணையர் சரிபார்ப்பு அலுவலர் மற்றும் கும்பகோணம் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு ராமு, ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அந்த இடத்தில் கோயில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த சொத்தின் தற்கால சந்தை மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் ஆகும்.

The post திருலோகி சுந்தரேஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tirulogi Sundareswara Swami Temple ,Thiruvidaymarathur ,Kumbakonam ,Ekoil ,Mayiladuthura Co ,
× RELATED ஓய்வூதியர் தின விழா