×

குடியாத்தம் அருகே வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம் வனத்துறையினர் நடவடிக்கை

குடியாத்தம் : குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம் கிராமத்தில் இருந்து பூங்குளம் செல்லும்  சாலையில் வனபகுதி உள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மீனுரான்பட்டி கிராமத்திலுள்ள சிலர்   மலையடியோரத்தில் ஆக்கிரமிப்பு ஈடுபட்டுள்ளனர். அப்போது, மலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல், ஆடு மேய்த்துகொள்ளவும், ஆடுகள் தங்க பட்டி அமைத்துக்கொள்ளவும் வனத்துறையினர் அனுமதி தந்தனர்.இந்நிலையில்  வேலூரை சேர்ந்த சிலர் அரசின் எந்தவித அனுமதியும் இல்லாமல் வனப்பகுதிக்கு ஒத்தையடி பாதை சாலை அமைத்து சித்த மருத்துவம் செய்வதாக கூறி அங்கு பட்டி அமைத்து மலைகளை உடைத்து பெயர் பலகை வைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வருவாய் துறையினர் மற்றும் பேர்ணாம்பட்டு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு அங்குள்ள பெயர் பலகைகளை அகற்றினர். மேலும் இங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்….

The post குடியாத்தம் அருகே வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம் வனத்துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Forest department ,Kudiatham ,Rangasamutram village ,Agraharam Panchayat ,Poongulam.… ,Dinakaran ,
× RELATED காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்