×

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு: மேயர், கமிஷனர் பங்கேற்பு

 

மதுரை, ஜூலை 24: மதுரை, கரும்பாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக இரு வகுப்பறை கட்டிடங்கள் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டன. இவற்றை மேயர் இந்திராணி, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ, கோ.தளபதி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

தொடர்ந்து மேயர், கமிஷனர் ஆகியோர் மாணவ, மாணவிகளிடம் கற்றல் சம்பந்தமாக கலந்துரையாடினர். இந்நிகழ்வில் கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் காமராஜ், உதவிப்பொறியாளர் அமர்தீப், கவுன்சிலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு: மேயர், கமிஷனர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Corporation ,School ,Madurai ,Corporation Middle School ,Karumbalai, Madurai ,Mayor ,Indrani ,Madurai North Constituency MLA ,Co. Thalapathy ,Corporation… ,Corporation School ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா