- நெடுவாக்கோட்டை ஸ்டாலின் திட்ட முகாம்
- மன்னார்குடி
- ஸ்டாலின் திட்டம்
- நெடுவாக்கோட்டை பஞ்சாயத்து
- தொழில்துறை முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிக அமைச்சர்
- டி.ஆர்.பி ராஜா
- தின மலர்
மன்னார்குடி, ஜூலை 23: மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் கலந்து கொண்டு 600 மனுக்களை ஆர்வத்துடன் அளித்தனர்.
இம்முகாமை தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா துவங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார். மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா துவங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில், நெடுவாக்கோட்டை, கீழநாகை, மேலநாகை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மனுக்கள் 415, மகளிர் உரிமை தொகை கேட்டு 185 மனுக்கள் என 600 மனுக்களை ஆர்வத்துடன் அளித்தனர். தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், தமிழ்நாடு முத லமைச்சர் போன்ற ஒரு முதல்வர் தங்களது மாநிலத்திலும் இருக்க வேண்டுமே என்று மற்ற மாநில மக்கள் பெருமூச்சு விட்டு ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான முதல்வரை நாம் பெற்றுள்ளோம்.
அரசு நிர்வாகம் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து \”உங்களுடன் ஸ்டாலின்\” முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் அதிகளவில் வந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் துணை முதலமைச்சர் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பித்துள்ள பட்டியல்களை பெற்று, தற்பொழுது அளிக்கப்பட்டுள்ள விதி முறை தளர்வுகளின் அடிப் படையில் அனைத்து மகளிர்களும் பயன்பெறும் வகையில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவு அளித்துள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வ பாண்டி, மாவட்டஅவைத் தலைவர் மேலவாசல் தனராஜ், ஒன்றிய செயலாளர்கள் சிவா, முத்துவேல், வக்கீல் கவியரசு, ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் காஞ்சித்துரை, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முருகானந்தம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 600 மனு பெறப்பட்டன appeared first on Dinakaran.
