×

லண்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கலசலிங்கம் பல்கலை

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 23: கலசலிங்கம் பல்கலைக்கழகம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சென்னை உலக திருக்குறள் மையம் சார்பில் உலக அளவில் நூறு நிறுவனங்களில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் தமிழ் மன்றம் சார்பில் திருக்குறள் மாநாடு நடந்தது. இதில் திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பு மற்றும் போட்டிகள் நடைபெற்றன.

இதனை பாராட்டும் விதமாக லண்டன் உலக சாதனை புத்தகத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழை சென்னை உலக திருக்குறள் மைய தலைவர் முனைவர் மோகன்ராஜ் வழங்கினார். சான்றிதழை பல்கலைக்கழக தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் சங்கீதா பெற்றுக்கொண்டார்.

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றமைக்கும், ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த பேராசிரியர்களுக்கும் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், ஆராய்ச்சி துறை இயக்குநர் பள்ளிகொண்ட ராஜசேகர், மாணவர் நல இயக்குநர் பால கண்ணன், கலசலிங்கம் கலைக்கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். தமிழ் மன்ற மாணவர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

The post லண்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கலசலிங்கம் பல்கலை appeared first on Dinakaran.

Tags : Kalasalingam University ,London Book of World Records ,Srivilliputhur ,Thirukkural ,Chennai World Thirukkural Centre ,Srivilliputhur Kalasalingam University ,Tamil Mandram… ,of World ,Records ,
× RELATED ஓய்வூதியர் தின விழா