- கேரளா
- முதல் அமைச்சர்
- அச்சுதானந்தன்
- மதுரை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்
- முதலமைச்சர்
- வி. அச்சுதானந்தன்
- மதுரை நகரம்
- புறநகர் சிபிஎம்
மதுரை, ஜூலை 23: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையொட்டி அவரது மறைவிற்கு மதுரை மாநகர் மற்றும் புறநகர் சிபிஎம் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் மாநில குழு உறுப்பினர் விஜயராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ் சிபிஐ, மதிமுக, சிபிஐ (எம்எல்), பார்வர்ட் பிளாக், தமுமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், சாமுவேல் ராஜ், மாநில குழு உறுப்பினர் பாலா, மாவட்ட செயலாளர் மதுரை மாநகர் கணேசன், திமுக அவைத்தலைவர் ஒச்சுபாலு, மதிமுக எம்எல்ஏ பூமிநாதன், மாவட்ட செயலாளர் முனியசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மகபூப்பாளையம் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அச்சுதானந்தனின் உருவப் படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
The post மறைந்த கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி appeared first on Dinakaran.
