×

அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விருதுநகர்: அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து சம்பவங்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே 2023ல் விருதுநகர் கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் வழக்கை விசாரித்தது.

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வு செய்ய அதிகாரிகள் செல்லும்போது பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் ஆலைகளை மூடி விட்டு சென்று விடுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் பட்டாசு ஆலை உரிமையாளர் சங்கம், தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலரை சேர்க்க உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் பலியாவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.

The post அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Southern Zone Green Tribunal ,Virudhunagar ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...