×

திருக்குறுங்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பொருட்கள் திருட முயற்சி

களக்காடு,ஜூலை 22: திருக்குறுங்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பொருட்களை திருட முயற்சி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி, மகிழடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. விவசாயி. சம்பவத்தன்று மதியம் இவரது மனைவி லெட்சுமி (25) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பூஜை அறையில் இருந்து பொருட்கள் சிதறி கீழே விழும் சத்தம் கேட்டது. இதைக்கேட்ட லெட்சுமி அங்கு சென்று பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் பீரோவை திறந்து அங்கிருந்த திருவிளக்கை திருடி சாக்கு மூடையில் வைத்து கொண்டு, மேலும் பொருட்களை திருடிக் கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த லெட்சுமி அதிர்ச்சியடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் மர்ம நபர் பொருட்களை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரம் குறித்து லெட்சுமி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் வீடு புகுந்து திருட முயற்சி செய்தது வட்டக்குளத்தை சேர்ந்த செல்லையா மகன் சுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகிரியில் மணல் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல் சிவகிரி,ஜூலை 22: சிவகிரியில் மணல் கடத்திய 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிய ஓடிய 2 ஓட்டுநர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகிரியில் மேற்குதொடர்ச்சி மலையொட்டி அமைந்துள்ள ராசிங்கபேரி கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராயகிரி விஏஓ மணிகண்டன் கண்மாய்க்கு சென்று ஆய்வு செய்த போது அங்கு ஜேசிபி மற்றும் டிப்பர் லாரிகளை பயன்படுத்தி மணல் அள்ளப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்து ஓட்டுநர்கள் கோமதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மேசாகு(27), ஒப்பனையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ஆதிகேசவன்( 25) ஆகியோரை தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த 2 வாகனங்களை பறிமுதல் செய்தார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை தேடி வருகின்றனர்.

The post திருக்குறுங்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பொருட்கள் திருட முயற்சி appeared first on Dinakaran.

Tags : Thirukuruungudi ,Kalakkadu ,Isakkimuthu ,Magizhadi Amman Koil Street, Thirukuruungudi ,Letchumi ,
× RELATED ஓய்வூதியர் தின விழா