×

மன்னார்குடியில் மது குடித்தவரை தட்டிக்கேட்ட முதியவருக்கு அடி உதை

மன்னார்குடி, ஜூலை 22: மன்னார்குடியில் தனது வீட்டின் அருகே மது குடித்தவரகளை தட்டிக்கேட்ட முதியவர்களை கட்டையால் தாக்கிய 2 வாலிபர்களை டவுன் போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி இலக்குணாம்பேட்டை 7ம் நம்பர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த வர் சேகர் (61). மர வியாபாரி. இவரது மனைவி சந்திரா (51). இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த செல்வம் (20), சதீஷ் (21) ஆகிய இரண்டு வாலிபர்கள் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எங்கள் வீட்டின் அருகே ஏன் மது குடிக்கிறீர்கள் என அந்த வாலிபர்களை சேகர் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கீழே கிடந்த கட்டையை எடுத்து சேகரையும் அதனை தடுக்க வந்த அவரது மனைவி சந்திராவையும் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

இதில் காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் டவுன் எஸ்ஐ கோமகன், எஸ்எஸ்ஐ ராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து செல்வம் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து மன்னார் குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post மன்னார்குடியில் மது குடித்தவரை தட்டிக்கேட்ட முதியவருக்கு அடி உதை appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Var Shekhar ,No. ,Vaikkal area ,Lakshmanpet, Mannargudi ,
× RELATED ஓய்வூதியர் தின விழா