×

கேசராபட்டியில் கோமாரி தடுப்பூசி முகாம்

பொன்னமராவதி, ஜூலை 22: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதையடுத்து, தமிழகத்திலும் பருவமழை துவங்க உள்ளதால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்படும். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட அரசு உத்திரவிட்டுள்ளது.

இதனையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் ஆலவயல் கால்நடை மருத்துமவனையின் மருத்துவர் ராஜசேகர் தலைமையில் கால்நடை பராமறிப்பு உதவியாளர் சாந்தி ஆகியோரைக் கொண்ட மருத்துவக்குழுவினர் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தினர். மேலும், பசு மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது. நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டது. கோழிகளுக்கு மருந்து வழங்கப்பட்டன. இந்த முகாமில் கால்நடை வளர்ப்போர் ஆர்வமாக தங்களது ஆடு, மாடு, கோழிகளை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்திச் சென்றனர்.

The post கேசராபட்டியில் கோமாரி தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Gomari vaccination ,Kesarapatti ,Ponnamaravathi ,Karnataka ,Kerala ,Tamil Nadu ,Gomari vaccination camp ,
× RELATED ஓய்வூதியர் தின விழா