- தமிழ்நாடு இயக்கம்
- Orani
- இலுப்பூர் பஞ்சாயத்து
- தரங்கம்பாடி
- செம்பனார் கோயில் தெற்கு ஒன்றியம்
- பூம்புகார்
- மயிலாதுதுரை மாவட்டம்
- சட்டமன்ற உறுப்பினர்
- நிவேதா முருகன்
- செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சி...
- தின மலர்
தரங்கம்பாடி, ஜூலை 22: மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி செம்பனார் கோயில் தெற்கு ஒன்றியத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் எம்எல்ஏ நிவேதாமுருகன் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.
செம்பனார் கோயில் தெற்கு ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்து பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதாமுருகன் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்தார். பொதுமக்களிடம் மண், மொழி, மானம் காப்பதின் அவசியம் குறித்தும், திமுக ஆட்சியின் 4 ஆண்டு சாதனை குறித்தும் எடுத்து கூறி அவர்களை திமுகவில் உறுப்பினராக்கும் பணியில் ஈடுபட்டார். எம்எல்ஏ நிவேதாமுருகனை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்வின் போது தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், மாவட்ட பிரதிநிதிகள் கே.எஸ்.எஸ்.கருணாநிதி, சடகோபன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
The post இலுப்பூர் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.
