- பாப்பிரெடிபட்டி
- எச். புதுப்பட்டி
- ஊத்தங்கரை
- அ.பள்ளிப்பட்டி
- வாணியம்பாடி-சேலம் தேசிய நெடுஞ்சாலை
- தின மலர்
பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 22: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. வாணியம்பாடி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.320 கோடி மதிப்பீட்டில் ஊத்தங்கரை முதல் ஏ.பள்ளிப்பட்டி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எருமையாம்பட்டி, எச்.புதுப்பட்டி அருகே ரூ.11 கோடியில் சுங்கசாவடி கட்டப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் நேற்று சுங்கசாவடி பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, வாகனங்களுக்கான கட்டண விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கார், ஜீப், வேன் அல்லது இலகுரக வாகனங்களுக்கு ஒருவழி பயண கட்டணமாக ரூ.70ம், அதேநாளில் திரும்பி வர ரூ.100ம், மாதத்திற்கு 50 முறை பயணம் செய்ய ரூ.2270ம். மாவட்ட பதிவு எண் கொண்ட வணிக வாகனங்களுக்கு பயண கட்டணமாக ரூ.35ம், இலகுரக வணிக வாகனம் அல்லது மினி பஸ்கள் ஒருமுறை செல்ல ரூ.110ம், அதே நாளில் திரும்பி வர ரூ.165ம். மாதத்திற்கு 50 முறை பயணம் செய்ய மாதாந்திர கட்டணமாக ரூ.3670ம், மாவட்ட பதிவு எண் கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ.55ம், பஸ் அல்லது டிரக் (2 அச்சுக்கள் கொண்டவை) ஒரு நாளைக்கு ஒருமுறை ரூ.230ம், அதே நாளில் திரும்பி வர ரூ.345, மாதத்திற்கு 50 முறை பயணம் செய்ய ரூ.7685ம், மாவட்ட பதிவு எண் வணிக வாகனங்களுக்கு ரூ.115ம் வசூலிக்கப்படும்.மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல ரூ.250ம், அதேநாளில் திரும்பி வர ரூ.375ம், மாதத்திற்கு 50 முறை செல்ல ரூ.8385ம், மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு ரூ.125ம் வசூலிக்கப்படும்.
பல அச்சுக்கள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஒரு முறைக்கு ரூ.360ம், அதே நாளில் திரும்பி வர ரூ.540ம், மாதத்திற்கு 50 முறை செல்ல ரூ.12050ம், மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு ரூ.180ம் வசூலிக்கப்படும். அதிக அச்சுக்கள் கொண்ட வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.440ம், அதே நாளில் திரும்பி வர ரூ.660ம், மாதத்திற்கு 50 முறை செல்ல ரூ.14,670ம், மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு ரூ.220ம் வசூலிக்கப்படுகிறது. மேலும், வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2025 முதல் 2026 ஆண்டுக்கான, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பயன்பாட்டுக்கு வந்த புதிய சுங்கசாவடி appeared first on Dinakaran.
