×

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.60 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்களும் இருந்தன

 

 

திருப்பரங்குன்றம், ஜூலை 22: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணிகள் மாதந்தோறும் நடைபெறும். இதன்படி கடந்த மாதம் பகதர்கள் வழங்கிய காணிக்கை கணக்கிடும் பணிகள் நேற்று நடைபெற்றது. இதற்கு அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, துணை ஆணையர் சூரிய நாரயணன், உதவி ஆணையர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, சத்யசீலன், அலுவலர்கள் மணிமாறன், கோபி உள்ளிட்டோருடன் கோயில் ஊழியர்கள், வேத பாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று காணிக்கைகளை கணக்கிட்டனர். இதன் முடிவில் 59 லட்சத்து 99 ஆயிரத்து 389 ரூபாய், 176 கிராம் தங்கம், 2 கிலோ 990 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.60 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்களும் இருந்தன appeared first on Dinakaran.

Tags : Thiruparankundram Murugan Temple ,Thiruparankundram ,Thiruparankundram Subramaniaswamy Temple ,
× RELATED ஓய்வூதியர் தின விழா