×

திமுக இளைஞர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்

முத்துப்பேட்டை, ஜூலை 21: முத்துப்பேட்டை அருகே இடும்பாவனத்தில் திமுக இளைஞர்அணி சார்பில் அரசின் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை இடும்பாவனம் கடைத்தெருவில் திமுக இளைஞர்அணி சார்பில் கலைஞரின் 102-வது பிறந்தநாள்விழா மற்றும் திமுக அரசின் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் இரா மனோகரன் தலைமை வகித்தார்.

முன்னதாக ஒன்றிய இளைஞர்அணி அமைப்பாளர்வெங்கடேஷ் வரவேற்று பேசினார். மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர்பனங்குடி குமார், மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர்கள் வினோத்குமார், எடிசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். இதில் தலைமைக்கழக பேச்சாளர்ஆடுதுறை உத்திராபதி, தலைமைக்கழக இளம் பேச்சாளர்விக்னேஷ்வரி ஆகியோர்பேசினார்கள். இதில் மாவட்ட பிரதிநிதிகள் பழனிவேல், ஒன்றிய பொருளாளர்கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய இளைஞர்அணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, தமிழன்பன், மகேந்திரன், மாதவன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர்தினேஷ்குமார், சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்உதய சூரியன் மற்றும் நிர்வாகிகள் மூத்த உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துக்கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞர்அணி துணை அமைப்பாளர்சபரிநாதன் நன்றி கூறினார்.

The post திமுக இளைஞர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK Youth Wing ,Muthupettai ,Idumbavanam ,Kalaignar ,DMK government ,Idumbavanam Kadaitheru ,Muthupettai, Thiruvarur district ,
× RELATED ஓய்வூதியர் தின விழா