அறந்தாங்கி, ஜூலை 21: அறந்தாங்கி அருகே படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த காரணியாநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் பானு என்ற பெண் கடந்த வாரம் வளர்த்து வந்த மாடுகளை கண்மாய் பகுதிக்கு தேடிச் சென்ற போது பாலியல் வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
படுகொலை செய்யப்பட்ட பர்வீன் பானுவின் கிராமமான காரணியாநேந்தலுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.இந்நிகழ்வில், அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏவும், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான உதயம் சண்முகம், அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் ஆனந்த், அறந்தாங்கி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அறந்தாங்கி முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயசுதா பொன்கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
The post அறந்தாங்கி அருகே கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அமைச்சர் ஆறுதல் appeared first on Dinakaran.
