×

வாண்டாகோட்டை அய்யனார் கோயில் திருவிழா: முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை, ஜூலை 22: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வாண்டாகோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் களரி திருவிழா முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அறந்தாங்கி ஆவுடையார் கோவில் குளவாய் பட்டி பேராவூரணி தஞ்சாவூர் திருச்சி சிவகங்கை மதுரை கம்பம் தேனி கோயம்புத்தூர் உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற பெரிய மாடு சிறிய மாடு போட்டியில் ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாட்டுவண்டி களுக்கும் வண்டி ஓட்டிய சாரதிக்கும் ரொக்கபரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

The post வாண்டாகோட்டை அய்யனார் கோயில் திருவிழா: முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Vandakottai Ayyanar Temple Festival ,First Annual Bullock Cart Race ,Pudukottai ,bullock cart race ,Kalari festival ,Vandakottai Ayyanar Temple ,Thiruvarangulam ,Pudukottai district ,Aranthangi Avudaiyar ,Temple ,Kulavai ,Patti ,Peravoorani ,Thanjavur Trichy… ,Vandakottai Ayyanar Temple Festival: ,
× RELATED தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு...