- சரல் விழா
- குற்றாலம்
- தென்காசி
- அமைச்சர்
- இராமச்சந்திரன்
- சாரல் திரு விழா
- மாவட்ட கலெக்டர்
- கமல் கிஷோர்
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர்...
தென்காசி,ஜூலை 21: குற்றாலத்தில் சாரல் திரு விழாவை நேற்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். குற்றாலத்தில் சாரல் திருவிழா துவக்க விழா மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விழாவை துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். எம்எல்ஏக்கள் ராஜா, பழனி நாடார், சதன் திருமலைக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், எஸ்பி அரவிந்த், மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி, கலை பண்பாட்டு துறை கோபாலகிருஷ்ணன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா, கல்லூரி கல்வி இணை இயக்குனர் ரவீந்திரன், உதவி சுற்றுலா அலுவலர் சந்திரகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திட்ட இயக்குனர் தண்டபாணி நன்றி கூறினார். பிஆர்ஓ எடிசன் தொகுத்து வழங்கினார்.
விழாவில் கேரள மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், தூத்துக்குடி யாழிசை ஆர்கெஸ்ட்ரா திரைப்பட மெல்லிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக தொடக்க விழாவை முன்னிட்டு மங்கள இசை, பேட்டை குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சி, மேலகரம் பரதாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, கோடகநல்லூர் யோக் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி, தூத்துக்குடி சுடர் கிராமிய கலை குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கொழு கொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: சாரல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். ஒரு சில ஆண்டுகள் விழா நடக்கும். ஆனால் சாரல் இருக்காது. அருவியில் தண்ணீரும் இருக்காது. ஆனால் தற்போது சாரலும் பெய்கிறது. அருவிகளில் தண்ணீரும் கொட்டுகிறது. பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் எல்லாம் சரியாக உள்ளது என்பதற்கான அத்தாட்சி
இந்த நிகழ்ச்சி. இன்று சாரல் விழா நடைபெறும் சூழலில் மக்களும் அதிகமாக வந்துள்ளனர். மாவட்ட கலெக்டர், எஸ்பி, வன அலுவலர் ஆகியோரிடம் குளிப்பதற்கு அனுமதி கொடுக்குமாறு கூறியிருக்கிறேன். சனி, ஞாயிறு, விடுமுறை தினங்களில் தான் அதிக மக்கள் வருவார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். முதல்வர் விரைவில் நமது மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார். நீங்கள் எதிர்பார்க்கும் பல திட்டங்களை முதல்வர் அறிவிக்க இருக்கிறார். நானும் கலெக்டரும், இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். எந்தெந்த திட்டங்களை அறிவித்தால் சரியாக இருக்கும் என்பதை கலந்து பேசி வருகிறோம். தென்காசி மாவட்டம் வளர்ந்த மாவட்டமாக இருக்கும். அதற்கான பணிகளை முதல்வர் செய்து கொடுப்பார்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஆறுமுகச்சாமி, சேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை ரஹீம், தமிழ்செல்வி, மாவட்ட துணை செயலாளர்கள் கென்னடி, கனிமொழி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ரமேஷ், திவான்ஒலி, ரவிசங்கர், மணிகண்டன், பொன்செல்வன், சிவக்குமார், குமார், சுரேஷ், ஜெயா, சேக்முகமது, நகர செயலாளர்கள் சாதிர், வெங்கடேசன், அப்பாஸ், பீரப்பா, கணேசன், பேரூர் செயலாளர்கள் குட்டி, சுடலை, முத்தையா, பண்டாரம், முத்து, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தென்காசி யூனியன் சேர்மன் ஷேக்அப்துல்லா, கடையநல்லூர் யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன்தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், அரசு வழக்கறிஞர்கள் வேலுச்சாமி, முத்துக்குமாரசாமி, நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா, பேரூராட்சி தலைவர்கள் சுந்தர்ராஜன், வேணிவீரபாண்டியன், துணைத்தலைவர் ஜீவானந்தம், சின்னத்தாய் சண்முகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராமராஜ், சுரேஷ், முகம்மதுஅப்துல் ரஹீம், அறங்காவலர்கள் வீரபாண்டியன், சுந்தர்ராஜன், தர், ராமலெட்சுமி, காங்கிரஸ் தலை
The post குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடக்கம் appeared first on Dinakaran.
