×

சங்கரன்கோவில் நகராட்சி அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

சங்கரன்கோவில்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சங்கரன்கோவில் நகராட்சி 8வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்டிஎஸ் திலீப்குமார், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதில் 8வது வார்டில் சங்கரன்கோவில் தொகுதி முன்னாள் செயலாளரான எஸ்.டி.சங்கரகுமாரின் மகனும், அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளருமான எஸ்.டி.எஸ்.திலீப்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அந்த வார்டை ேசர்ந்த அதிமுகவினர், சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக  செயல்பட்டுள்ளனர். இதையடுத்து அதிமுகவில் இருந்து விலகிய எஸ்.டி.எஸ்.திலீப்குமார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தார்….

The post சங்கரன்கோவில் நகராட்சி அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Sankaranko ,Municipal 8th Ward ,Sankaranko Municipal ,8th Ward ,STS Tilipkumar ,Akkam ,Dinakaran ,
× RELATED அஞ்சலகங்களில் நாளை ஆதார் சேவை நேரம் அதிகரிப்பு